12 Jan 2023

அன்பின் முழுமைப் பொழுதுகள்

அன்பின் முழுமைப் பொழுதுகள்

என் அன்பு முழுமையானதல்ல

முத்தம் இரவு தொடங்குவதற்கு முன்பாக

மாலை வேளைகளில் கன்னங்களை வருடலாக

அதிகாலைச் சற்று முன்னதாக தழுவலாக

மதியப் பொழுதுகளில் கைகளைக் கோர்த்தலாக

தேநீர் அருந்தும பொழுதுகளில் தலை கோதுதலாக

கண்ணயரும் பொழுதுகளில் மடியில் உன்னை ஏந்தலாக

செல்லச் சிணுங்கள்களில் உறைந்து போதலாக

கடிந்து பேசுகையில் நிலைதடுமாறும் முன்முறுவலாக

பகுதி பகுதியாக வெளிப்படும்

எனதன்பு முழுமையானதல்ல

நீயென்னை முழுமையாக்கிக் கொள்ளும் பொழுதுகளால்

ஒருவேளை முழுமையானதாகத் தோன்றலாம் எனதன்பு

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...