12 Jan 2023

நினைத்துக் கொண்டிருத்தலும் இறந்து கொண்டிருத்தலும்

நினைத்துக் கொண்டிருத்தலும் இறந்து கொண்டிருத்தலும்

எனக்குத் தெரியும் நீ நம்ப மாட்டாய்

ஒன்று உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

அல்லது இறந்து கொண்டிருக்கிறேன்

இறப்பைத் தள்ளிப் போடவே

உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

வேறு இதை இப்படியும் சொல்லலாம்

உன்னை நினைத்துக் கொண்டிருப்பதற்காக

உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

உனக்கு இதை எப்படிப் புரிய வைப்பது

ஒரு விபத்துப் பொழுதில்

மரணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறேன்

மருத்துவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கைவிட்டு

நகரச் செல்ல முற்பட்ட போது

உன் நினைவுகள் வந்து உயிர் கொள்கிறேன்

மருத்துவர்கள் அதை மெடிக்கல் மிராகிள் என்கிறார்கள்

எனக்கு மட்டும்தான் தெரியும் அதுதான் என் இயற்கை என்று

உனக்கும் ஒரு நாள் புரியாமலா போய் விடும்

இயற்கை எப்போதும் அப்படிதானன்று

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...