11 Jan 2023

மகிழ்ச்சியின் ரகசியத்தோடு நேசிக்கும் பெண்ணொருத்திக் காத்திருக்கிறாள்

மகிழ்ச்சியின் ரகசியத்தோடு

நேசிக்கும் பெண்ணொருத்திக் காத்திருக்கிறாள்

என் மகிழ்ச்சியின் ரகசியம் என் தோட்டம்

அந்தத் தோட்டத்தில்

உன் இதயத்திற்காக

இதயத்தின் இதழ்களைப் போல ரோஜாக்கள் பூக்கின்றன

உன் கருங்கூந்தலுக்காக வெண் மல்லிகைகள் பூக்கின்றன

நீ கைகளில் ஏந்திக் கொள்வதற்காக

தடாகத் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன

உன் இதழ்களோடு பேசுவதற்கென்று

செண்பகப் பூக்கள் பூத்திருக்கின்றன

உன் நுகர்தலுக்குக் கெடுதல் செய்யாத வகையில்

கனகாம்பரங்கள் பூத்துக் குலுங்குகின்றன

கடலையும் வானத்தையும்

உன் கண்களுக்குக் காட்டுவதற்கென்றே

டிசம்பர் பூக்கள் பூத்துச் சிரிக்கின்றன

நான் இந்தத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்கிறேன்

உன்னைப் பார்த்துக் கொள்வதைப் போல

உன்னைப் பார்த்துக் கொள்வதும்

இந்தத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்வது போலத்தான் எனக்கு

இந்தத் தோட்டமாக நீயும்

நீயே இந்தத் தோட்டமாகவும் இருக்கையில்

என் மகிழ்ச்சிக்கு என்ன குறையிருக்கப் போகிறது

நான் எல்லாரிடமும் சொல்கிறேன்

உங்கள் மகிழ்ச்சிக்கான தோட்டத்தை உருவாக்குங்கள்

உங்களை நேசிக்கும் பெண்ணொருத்திக் காத்திருக்கிறான் என்று

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...