23 Dec 2022

ஐங்குறு ஐந்து

ஐங்குறு ஐந்து

ரொம்ப பெரிய மனிதர் என்கிறார்கள்

பேசினால்

இப்படித்தான் பேராடிப்பாரோ

*

என்ன வாழ்க்கை சார்

ஆசைப்பட்டதை வாங்க முடிகிறதா

வாங்க முடிந்ததை

என்றாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா சார்

*

எனக்கு அவளைப் பிடிக்கவில்லை

அவளுக்கு என்னை பிடிக்கவில்லை

என்னதான் சார் பண்ண

எல்லாரும் பிடித்தா வாழுகிறோம்

ஏதோ வாழுங்கள் சார் ப்ளீஸ்

*

அட்வைஸ் பண்ணா

பிள்ளைங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது சார்

அப்ரிசியேட் பண்ணுங்க சார்

அதைப் பண்ண எனக்கு எங்கே சார் பிடிக்கிறது

*

மரம் வளர்ப்போம்

மழை பெறுவோம்

வேற ஏதாவது கொடுங்க சார்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...