23 Dec 2022

எல்லாரும் பெரிய மனுஷன் என்று பெயர் எடுக்கலாமே

எல்லாரும் பெரிய மனுஷன் என்று பெயர் எடுக்கலாமே

அடிப்பார்கள் உதைப்பார்கள்

தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்

இருப்பதை ஒழுங்கு மரியாதையாக இரு

இல்லை வீட்டை விட்டு ஓடு என்பார்கள்

பெற்றெடுத்த பிள்ளைகள்

சோறு போட மாட்டாள்

கண்டபடி திட்டுவாள்

கெட்ட வார்த்தை கூறுவாள்

கூசி நிற்பதை ரசித்துப் போவாள்

கூனி நிற்பதை இளித்துக் கொண்டு போவாள்

வாக்கப்பட்டு வந்த மருமகள்

வீடடங்கி இருந்தாலென்ன

வயசான காலத்தில் ரோஷமென்ன

பொசுக்குன்னு கௌம்பி வந்திடுறீயே

செருப்பால் அடிப்பது போல

சொல்லால் அடிப்பாள் செல்ல மகள்

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு

நாய்க்குப் போடும் சோற்றை

நாக்கு ருசிக்க தின்று கொண்டு

ஒன்றும் சொல்லாமல்

ஊருக்குள் இருந்தால்

பொறுமையான மனுஷனப்பா என்று

பார்ப்போர் போற்ற வாழலாமே

எல்லாரும் பெரிய மனுஷன்

என்ற பெயரை வாங்கலாமே

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...