பார்த்தலின் பிரதி
பார்த்தேன் பிடிக்கவில்லை
திரும்ப திரும்ப பார்த்தால்
பிடிக்குமென்றும் பார்த்தேன்
வெறுப்புதான் கூடியது
அதுவே ஒரு பிரமாண்டமாக வந்து
நின்ற போது
வேறு வழியில்லாமல்
பார்க்க வேண்டியதாகி விட்டது
பார்த்துப் பார்த்துப் பழகி
அதைப் பார்க்கிறேனோ
அல்லது பார்க்காமல் இருக்கிறேனோ
என்பது
எனக்கு மறந்து போய் நாளாகி
விட்டது
*****
No comments:
Post a Comment