அதிகாலையின் அற்புத அழைப்பு
ஹலோ ஹலோ ஹலோ
மூன்று ஹலோ சொன்னால்
நான் ஒரு ஹலோ சொல்வேன்
ஹலோவை விரயம் செய்யவும் கூடாது
எதிராளி சொல்லாமல் முந்திச்
சொல்லவும் கூடாது
நீங்க யாரு பேசுறீங்க என்றால்
உங்க பிரண்ட் சின்னசாமி என்பேன்
சின்னசாமின்னு பிரெண்ட் இல்லை
என்றால்
அப்படியா போனை வையுங்கள்
என்பேன்
வெச்சிடாதீங்க நீங்க ரங்கநாதன்
இல்லையா என்றால்
உங்களுக்காக வேண்டுமானல்
ரங்கநாதனாக இருக்கிறேன் என்பேன்
விளையாடாதீங்க நீங்க ரங்கநாதன்
இல்லையா என்றால்
ரங்கநாதனாக இருக்க எப்போதோ
தயார் என்பேன்
காலையிலேயே யார்யா நீ சாவுகிராக்கி
என்றால்
நான் என்ன செய்ய முடியும்
சொல்லுங்கள்
நான்தான் சின்னசாமியாக இருந்தாலும்
ரங்கநாதனாக இருக்கவும் தயார்
என்கிறேனே
கடைசியில் வையடா போனை ராங்
நம்பர் என்கிறார்
நானா போன் செய்தேன் அவருக்கு
நான் முதலில் வைப்பதற்கு
பரவாயில்லை சொல்லுங்கள்
நான் யாராக இருக்க வேண்டும்
சொல்லுங்கள் உங்களுக்கு என்றதும்தான்
அவராக வைக்கிறார் போனை
*****
No comments:
Post a Comment