அலைபேசி இல்லாவிட்டால் யாரிடம்
பேசுவது
அலைபேசி இருப்பதால் யாரிடமாவது
பேசிக் கொண்டே இருக்க முடிகிறது
அலைபேசி பேச்சில் அவ்வளவு
சௌகரியங்கள்
முகத்தை எப்படி வைத்துக்
கொண்டும் பேசலாம்
கழிவறையில் இருந்து கொண்டும்
பேசலாம்
வரவேற்று உபசரிக்கும் கொடுமை
கிடையாது
பேச்சு வாக்கில் சாப்பிட்டீங்களா
டீ குடிச்சீங்களா
கேட்டுக் கொள்ளலாம்
கொண்டு போய் கொடுக்க வேண்டியதில்லை
பாருங்கள்
மாமா வீட்டில் ஏசி வைத்தது
சித்தி வீட்டில் பிரிட்ஜ்
வெடித்தது
கொழுந்தன் பெண் ஓடிப் போனது
அக்கம் பக்கத்தில் சீட்டு
கட்டி ஏமாந்தது
எதிர் ப்ளாட்டில் கல்யாணம்
ஆகாமல் முழுகாமல் இருப்பது
டிவோர்ஸ் ஆன பிரெண்டுக்குக்
குழந்தை பிறந்திருப்பது
மூன்று மாதமான கல்யாணப் பெண்ணுக்கு
லேப்ராஸ்கோப்பியோ எண்டோஸ்கோப்பியோ
எடுத்தது
அஞ்சிக்குப்பம் அத்தைக்கு
ஆஞ்சியோ செய்தது
தொண்டிமுத்து தாத்தா கோயிலில்
பிச்சை எடுப்பது
இப்படி இப்படித் தகவல்கள்
தகவல்கள்
அலைபேசி சூடாகி வெந்துத்
தணியும் வரை
போதும் என்று சொன்னாலும்
போதாக்குறையென வந்து கொண்டிருக்கும்
எல்லார்க்கும் பேசியாகி விட்டது
என்றாலும்
லோன் வேண்டுமா என்று யாராவது
பேசுவார்கள்
அவர்களிடம் வற்றல் குழம்பு
வைப்பது தொடங்கி
வடகம் போடுவது பார்க்காமல்
விட்ட சீரியல் வரை
பேசிக் கொள்ளலாம் பொறுமையாகக்
கேட்டுக் கொள்வார்கள்
அலைபேசி இல்லாவிட்டால் யார்
அழைப்பார்கள் சொல்லுங்கள்
அலைபேசி ஒன்றை வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள்
நாமிருக்கும் இடத்திலிருந்து
நாமும்
அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து
அவர்களும் பேசிக் கொள்ளலாம்
யாரும் பேசா விட்டாலும்
அலைபேசியைக் காதில் வைத்து
நாமாகப் பேசிக் கொள்ளலாம்
யாரோடு பேசிக் கொள்வதாக நினைத்துக்
கொள்வார்கள்
நினைத்துக் கொள்பவர்கள் நினைத்துக்
கொள்ளட்டும் நமக்கென்ன
*****
No comments:
Post a Comment