பெண்களே பெண்களுக்காக பெண்களால் நடத்தும் ஓர் அலுவலகம்
மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும்
வேலை என்றால் சந்தோசமாகச் செய்கிறேன். பெண்ணுக்குப் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை மட்டும்
ஒத்துக் கொள்வதில்லை.
மாப்பிள்ளை படித்திருக்க
வேண்டும்,
மாப்பிள்ளைக் குடிக்காதவராக
இருக்க வேண்டும்,
மாப்பிள்ளை நல்ல வேலையில்
இருக்க வேண்டும்,
மாப்பிள்ளை அனுசரித்துப்
போகிறவராக இருக்க வேண்டும்,
குறிப்பாக
மாப்பிள்ளை நல்லவராக இருக்க
வேண்டும் என்று
பெண்கள் போடும் நிபந்தனைகள்
(கண்டிஷன்கள்) பயங்கரமாக இருக்கின்றன.
இதனால் என்னைச் சுற்றி எப்போதும்
ஆண்களின் கூட்டமாக இருக்கிறது.
பெண்களுக்காகப் பெண்களே நடத்தும்
ஒரு தரகர் அலுவலகத்தை ஆரம்பிக்கலாமா என்று இருக்கிறேன்.
*****
அரச மரத்து ஞானமடையாத மனிதர்கள்
அரச மரத்தைப் பார்க்கும்
போதெல்லாம் புத்தர் ஞானமடைந்தது ஞாபகம் வருகிறது.
இந்த அரச மரத்தின் அடியில்தான்
சொக்கட்டான் ஆடுபவர்களும், ஆடுபுலி ஆட்டம் ஆடுபவர்களும், சீட்டு ஆடுபவர்களும், குடித்து
விட்டு மயங்கிக் கிடப்பவர்களும் எந்நேரமும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்போது
ஞானம் அடைவார்களோ?
*****
மழைக்காலக் கூத்துகள்
பெய்யும் மழையைப் பார்க்கையில்
குழந்தையைப் போல் ‘ரெய்ன்
ரெய்ன் கோ அவே’ என்று பாடத் தோன்றுகிறது.
எந்த மழையும் எப்போதும் வேண்டுமானாலும்
வெள்ளமாகி வீட்டுக்குள் ஓடி வரலாம்.
*****
மழை பெய்தால் வானத்தைப் பார்ப்பார்கள்.
குழந்தைகள் தொலைக்காட்சியைப்
பார்க்கிறார்கள்.
ஹைய்யா பள்ளிக்கூடம் விடுமுறை
விட்டு விட்டார்கள் என்று சந்தோசமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
தொலைகாட்சி இல்லாவிட்டால்
மழை பெய்தால் விடுமுறை விட மாட்டார்கள்தானே?!
*****
கனமழையால் திருவள்ளூர் மாவட்டப்
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதைப் பிள்ளைகள் திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை
என்று குதூகலிக்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கு
விடுமுறை என்பதை இப்படித்தான் திருவள்ளூர் மாவட்டப் பிள்ளைகள் பார்த்துக் குதூகலிப்பார்களோ?
யாரேனும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தால் பதிவு போடுங்கள்.
*****
No comments:
Post a Comment