9 Oct 2022

சமரசத்திற்கான மாபெரும் பாதைகள்

சமரசத்திற்கான மாபெரும் பாதைகள்

மனைவியுடன் சண்டை வந்தால் என்ன செய்வது?

அதைத் தீர்த்துக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன.

பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இது ரொம்ப பழமையான முறைதான் என்றாலும் பேசாமல் இருந்தாலும் சண்டை தீர்ந்து விடும்.

சண்டை வந்து விட்டது என்பதால் சண்டையை முழுதாகப் போட்டும் தீர்த்துக் கொள்ளலாம்.

என்ன நான்கு அடிகள்தானே அடிக்கப் போகிறார் எனப் பெருந்தன்மையாக விட்டு விடலாம்.

பிறகு அவர் யாரிடம்தான் சண்டை போடுவார் என்று ஏற்றுக் கொண்டு விடலாம்.

அவருக்கும் ஒரு வடிகால் (ரிலாக்ஸ்) வேண்டியதில்லையா என்று அதைப் புரிந்து கொள்ளலாம்.

பேசித் தீர்த்துக் கொள்வதைப் போல எழுதியும் தீர்த்துக் கொள்ளலாம். அதெப்படி?

சண்டை வந்து உடன் இருவரும் எழுதத் தொடங்கி விட வேண்டும்.

எழுதி முடித்த பின் ஒருவருக்கொருவர் எழுதியதைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

ஒருவர் எழுதியதை இன்னொருவர் படிக்கும் அளவுக்குப் பொறுமை இருக்காது. இதற்குப் பேசாமல் சண்டை போடாமல் இருந்திருக்கலாம் என்ற ஞானநிலை தானாக வந்து விடும்.

இதை விட வேறு எளிமையான வழிகள் இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஏன் இல்லாமல்? சண்டை வந்த உடன் அலைபேசியை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கம் சென்று விடலாம்.

நிறைய கணவன் – மனைவி சண்டைகள் இந்த முறையில்தான் தற்காலத்தில் தவிர்க்கப்படுகின்றன.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...