7 Oct 2022

வீட்டின் நடுவே புத்தர்

வீட்டின் நடுவே புத்தர்

வீட்டின் நடுவே சரியாகச் சொல்வதானால் நடுக்கூடத்தில் புத்தரை வைத்திருந்தான் நண்பன்.

அவரை ஏன்டா நடுவீட்டுல வைத்திருக்கே என்றேன்.

மன அமைதிக்காக என்றான்.

அட போடா முட்டாள்! அவரே மன அமைதி கிடைக்காமல் காட்டுக்குத்தான் போனார் என்றேன்.

அந்தப் பேச்சைத் தொடர்ந்து,

என்னுடைய கணிப்புப்படி அவன் புத்தரைத்தான் வீட்டை விட்டுத் துரத்தியிருக்க வேண்டும்.

என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான்.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...