எதார்த்த விதிகள்
எந்தப் படமாக இருந்தால் என்ன?
தமிழ் ராக்கர்ஸில் நிறைய
பேர் பார்க்க வேண்டும்.
பிறகுதான் படம் ஹிட்டடிக்க
முடியும்.
*****
கென்னடி இப்படியும் பேசியிருப்பார்!
சுயநலமாக இருக்கும் யாரையும்
எனக்குப் பிடிக்காது
என்னைத் தவிர
நான் ஒருவன் சுயநலமாக இருப்பதால்
நாடென்ன கெட்டா விடப் போகிறது
என்று
ஒவ்வொருவரும் சுயநலமாக இருப்பதால்
நாடென்ன கெட்டா விடப் போகிறது?
*****
குழந்தைகளின் உலகில் நானும் ஒரு குழந்தையே
இதைப் பார்
அதைப் பார்க்காதே
இதைச் செய்
அதைச் செய்யாதே
இதைத் தின்
அதைத் தின்னாதே என்றால்
குழந்தைகளுக்குப் பிடிக்கிறதா?
எதையாவது பார்
எதையாவது செய்
எதையாவது தின் என்றால்
குழந்தைகளுக்கு எவ்வளவு பிடிக்கிறது!
குழந்தை குண்டுகளைத் தூக்கிக்
கொண்டு
மருத்துவமனைக்கு அலைந்து
கொண்டும்
அவர்கள் கண்களில் சோடா புட்டி
உட்பட
பல புட்டி கண்ணாடிகளை மாட்டிக்
கொண்டும்
குழந்தைகளுக்குப் பிடித்தவமானவராக
இருக்கவே பிடிக்கிறது.
வருங்காலம் நம்மையும் ஒரு
நேரு மாமாவாகப் பார்க்கும் வாய்ப்புகளை நாமே தடுத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன்.
இந்த எண்ணம் தோன்றியதும்
குழந்தைகளோடு குழந்தைகளாக சோட்டா பீம் பார்க்கிறேன்; அலைபேசியில் விளையடுகிறேன்; பர்க்கரைக்
கொரிக்கிறேன்; நூடுல்ஸை உரிக்கிறேன்;
மருத்துவர்கள் ஒபேசிட்டியைக்
குறையுங்கள் என்று சொல்லும் போதெல்லாம் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறேன்.
*****
No comments:
Post a Comment