6 Sept 2022

ஓய்வுத் திட்டம்

ஓய்வுத் திட்டம்

புறநகரில் மனையொன்று வாங்கிப் போடுங்கள்

உங்கள் வீட்டோடு வாடகைக்கு விட

இரண்டு வீடு சேர்த்துக் கட்டுங்கள்

படித்து முடித்து பிள்ளைகள்

அமெரிக்காவோ கனடாவோ சென்று விட்டால்

வாடகைக்குக் குடியிருப்போர்

துணையிருப்பார்கள்

நமக்கென்ன தலைவிதியா

முதியோர் இல்லத்தில் சென்று கிடக்க

உங்கள் பிள்ளைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்

பேரன் பேத்திகளை

வீடியோ கால்களில் பார்த்துக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...