4 Sept 2022

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது

தவறவிட்டதைக் கண்டெடுத்தவர்

கொண்டு வந்துக் கொடுக்கிறார்

திருடிப் போனவர் திரும்ப வந்து

திருப்பிக் கொடுத்து விட்டுப் போகிறார்

ஏமாற்றியவர் எடுத்துக் கொண்டதைப்

பாதம் பணிந்து சமர்ப்பிக்கிறார்

வேண்டிக் கொண்டவுடன் சாமிகள்

வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகிறார்கள்

வாக்குறுதி அளித்தபடி தலைவர்கள்

திட்டங்களைத் தீட்டிச் செயல்படுகிறார்கள்

தவறென்று தெரிந்தால் தட்டிக் கேட்கிறார்கள்

தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்

சின்னதொரு பிழைக்கும் குற்றவுணர்ச்சியில்

குமைந்து உருக்குலைந்து போகிறார்கள்

ஆபத்தென்றால் ஓடி வந்து உதவுகிறார்கள்

இப்படியெல்லாம் நடந்தால் நன்றாகவா இருக்கும்

உங்களுக்கு அலட்சியம் அன்றோ அதிகமாகி விடும்

எல்லாவற்றையும் யாரோ பார்த்துக் கொள்வார்கள்

என்றல்லவோ இருந்து விடுவீர்கள்

உங்களை இயக்க வைக்க வேண்டுமென்றால்

எல்லாம் நடந்தாக வேண்டும்

எல்லாம் என்றால் எல்லாம்தான் நடந்தாக வேண்டும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...