இதற்குப் பெயர்தான் புரோஜெக்டாம்
“அப்பா! மிஸ் படம் வாங்கி
ஒட்டச் சொன்னாங்க!” என்று மகள் சொன்னதைக் கேட்டு இது வரை மூன்று கடைகள் ஏறி இறங்கி
விட்டேன்.
ஒரு கடையிலும் அவள் கேட்ட
மாதிரியான படங்கள் இல்லை. இதிலே அரை நாள் ஓடி விட்டது. ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் வீட்டில்
வந்துப் பார்க்கலாம் என்றிருந்தேன். அந்த வேலையும் இந்த அலைச்சலால் காலியாகி விட்டது.
இன்னும் மூன்று கடைகள் ஏறி
இறங்கினால் இந்த ஞாயிற்றுக் கிழமையில் மீதமுள்ள அரை நாளும் காலியாகி விடும். கிடைக்கின்ற
ஒரு நாள் ஞாயிறு விடுமுறையும் அபேஸ்.
மகளுக்காக ஆறு கடைகள் ஏறி
இறங்கியது நல்ல அனுபவமாக இருக்கலாம்.
ஆறு கடைகளிலும் கிடைக்காத
ஒரு படத்தைக் கண்டறிவதுதான் ஒரு மிஸ் தரும் புராஜெக்டா?
கிடைக்காத ஒரு படத்தை வைத்து
ஒரு புராஜெக்ட் பண்ணி வா என்று சொல்வதற்கு எதற்கு ஒரு மிஸ்?
ஒரு குழந்தையால் எதைச் செய்ய
முடியும், எதைச் செய்ய முடியாது என்பது அறிந்தல்லவா ஒரு புராஜெக்டைக் கொடுக்க வேண்டும்.
இந்த மிஸ்கள் சின்னக் குழந்தைகளுக்கு
பி.ஹெச்.டி. அளவுக்குப் புராஜெக்ட் கொடுக்கிறார்கள். அதை பெரியவர்களாகிய எங்களாலே செய்ய
முடியவில்லை. தவிரவும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பல புராஜெக்ட்களைப் பெற்றோர்களாகிய
நாங்கள்தான் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.
இனிமேலாவது தயவு செய்து குழந்தைகளுக்குப்
புராஜெக்ட் கொடுங்கள், பெற்றோர்களுக்குப் புராஜெக்ட் கொடுக்காதீர்கள் என்று அந்த மிஸ்ஸை
வேண்டிக் கொள்கிறேன்.
*****
No comments:
Post a Comment