மனித தெய்வத்துக்குக் கோயில்கள்
‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது தமிழ் மக்களின்
பழமொழி.
மூலைக்கு மூலை, தெருவுக்குத் தெரு என்று கோயில்கள் உள்ள ஊர்களைத்
தமிழகத்தில் பார்க்கலாம்.
அந்த அளவுக்கு இல்லா விட்டாலும் ஊருக்கு ஒரு கோயிலாவது இல்லாத
ஊரைத் தமிழகத்தில் பார்க்க முடியாது.
அனைத்துத் தெய்வங்களுக்கும் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
சிவனால் கோயில் அமையாது என சபிக்கப்பட்ட பிரம்மனுக்குக் கூட
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் கோயில் உள்ளது.
பிரம்மனின் துணைவியாய்க் கூறப்படும் சரஸ்வதிக்கு திருவாரூர்
மாவட்டம் கூத்தனூரில் கோயில் உள்ளது.
தமிழ்நாட்டில் நடிகைகளுக்குக் கூட கோயில்கள் கட்டப்பட்டன.
கொரோனாவுக்குக் கூட கோவையில் கொரோனாதேவி கோயில் எழுப்பப்பட்டது.
இப்படி தாங்கள் ஆராதிக்கும் அனைத்திற்கும் கோயில் எழுப்பி மகிழ்வது
தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த குணாதியம்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் மனித தெய்வமான காந்தியடிகளுக்குக்
கோயில்கள் இல்லாமல் இருக்குமா?
தமிழ்நாட்டில் மனித தெய்வமான காந்திக்கு இரண்டு இடங்களில் கோயில்
இருக்கின்றன. அந்த இரண்டு இடங்கள்
1. |
செந்தாம்பாளையம் |
ஈரோடு மாவட்டம் |
2. |
காமயககவுண்டன்பட்டி |
தேனி மாவட்டம் |
*****
No comments:
Post a Comment