17 Aug 2022

ஒரு கல் ஒரு மோதல்

ஒரு கல் ஒரு மோதல்

தடுக்கி விழும் போது ஏனோ

புவியீர்ப்பு விசை சமநிலைக்குப் பொறுப்பேற்காது

பேசாமல் வான வெளியில் வசித்து விடலாம்

ஆக்சிஜன் கிடைக்காது என்கிறார்கள்

நிலவில் வசித்தார் நீர் கிடைக்காது என்கிறார்கள்

இங்கு மட்டும் என்ன

தடுக்கி விழுந்து மண்டை உடைந்தால்

மருத்துவ வசதி லேசில் கிடைக்காது

புல் தடுக்கி மாண்டோர் கதைகள் இங்குண்டு

புல் அடித்து மாளாதோர் கதைகளும் உண்டு

தடுக்கி விழுவது நம் கையிலா இருக்கிறது

அது காலில் இருக்கிறது

நட்ட கல்லும் பேசுமோ என்று சித்தர்கள்

சும்மாவா சொன்னார்கள் சொல்லுங்கள்

கல் அதுவாக மோதாது என்கிறார்கள்

நாம் சென்று மோதிக் கொள்கிறோமே

கல்லுக்கும் நமக்கும் ஆதி கால பகை

இன்னும் இருக்கிறது போலும்

அதற்காக என்ன செய்வது

கல் தோன்றி மண் தோன்றா முன் காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி அதிர்ஷ்டம் செய்தது

கல்லுக்குள் ஈரம் இருந்தால்

இந்த வேலை செய்யுமோ கல்

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...