16 Aug 2022

கடவுளிடம் பேசுவது மற்றும் அளவளாவுவது

கடவுளிடம் பேசுவது மற்றும் அளவளாவுவது

நீங்கள் கடவுளோடு என்றாவது பேசியிருக்கிறீர்களா

பேசாமலென்ன

அவர் பேச வேண்டுமே

கடவுளை எப்போதிலிருந்து உங்களுக்குத் தெரியும்

சரியாக நினைவில்லை என்றாலும்

நான்கைந்து ஜன்மங்களாகத் தெரியும் என்று நினைக்கிறேன்

இந்தப் பிறவியின் டேட் ஆப் மறந்து விட்டாலும்

சற்றேறக்குறைய அது சரிதான்

அவருக்குத் தெரியாமல் இருக்காது

எல்லாருக்கும் கடவுளாக இருப்பதால்

எத்தனை பேரின் விவரங்களை

அவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்

அவரும் பாவம்தான்

ஆலயத்தில் அடைத்து வைத்து

பூஜை புனஸ்காரங்கள் என்று இருப்பதால்

வெளியில் வர நேரம் கிடைக்காமல் அல்லல் படுகிறார்

சரிதான் நாம் சென்று பார்ப்போம் என்றால்

அபிஷேக ஆராதனைகள் முடிவதற்குள் களைத்து விடுகிறார்

நேற்று கொஞ்சம் பேசலாம் என்று உணர்ச்சி வசப்பட்டு விட்டார்

அன்று அவருக்கு மௌன விரதம் இருப்பது அறியாமல்

*****

No comments:

Post a Comment

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை!

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை அனுபவம்! “கவிதை எழுதி நீண்ட நாளாயிற்றே?” என்றார் நண்பர். காற்றில் பறந்த காகிதம் ஒன்றைக் கப்பெனப் ப...