16 Feb 2022

நொடிக்கொரு தரம் மின்னும் தலைப்புச் செய்திகள்

நொடிக்கொரு தரம் மின்னும் தலைப்புச் செய்திகள்

சக்கரத்தின் காலடியில் நசுங்கும் உயிரின் இறகுகள்

காற்றின் சிறகுகளில் படபடக்கின்றன

வலியின் ஒலியைப் பரப்பியபடி

பக்கவாட்டில் நகர்ந்தவாறு செல்கிறது பிதுங்கிய இதயம்

பயணங்களில் விபத்துகள் முடிவதில்லை என்ற

வாசகத்தை உமிழ்ந்தவாறு செல்கிறார் வழிபோக்கர்

வேகம் கொள்ளும் சாபத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு

சக்கரங்கள் கடவுள்களிடம் மண்டியிடுகின்றன

உரிய நேரத்தில் வேலை செய்யாமல் போகும்

தடைகளைத் தண்டிக்குமாறு கோரிக்கைகள் பறக்கின்றன

கடவுளின் செவிகளில் எதுவும் ஏறுவதாகத் தெரியவில்லை

உயிரைத் துறந்து விட்ட ஆத்மாக்களை

அரவணைத்துக் கொள்வதோடு

அன்றைய பொழுது இரத்தக் கவிச்சியோடு முடிகிறது

மறுநாள் பொழுதின் மற்றொரு கவிச்சை வாடையை

பிறிதொரு விபத்துத் துவங்கி வைக்கிறது

நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பதோடு

கடவுளின் செயல் முடிந்து விடுவதாக அறிவிக்கப்படுகிறது

கடவுளிடம் செல்லப் போகும் உயிர்களைக் காப்பதற்காக

மருத்துவர்கள் போராடிக் கொண்டிருப்பதாகத்

தலைப்பு செய்திகள் நொடிக்கொரு தரம் மின்னுகின்றன

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...