14 Feb 2022

மூப்படையாத பெருவெளி

மூப்படையாத பெருவெளி

சிறு குழந்தைகள் விநோதமாகக் கேள்வி கேட்கிறார்கள்

விடை தேடி காட்டுப்பெருவெளியில் தொலைகையில்

தேவதையின் கரங்களோடு விடை கூறி மீட்கிறார்கள்

அருகில் இருக்கும் தட்டுப்படாத மருந்தை

நெடுந்தூரம் தேடி அலைந்து விட்ட களைப்பை

புன்சிரிப்பால் மீட்கும் குழந்தைகள்

அடுத்ததொரு வெடிச்சிரிப்பைப் போட்டு

அடுத்த முறை வரும் போது

இன்னும் பல நுணுக்கங்களைத் தருவதாய் வாக்களிக்கிறார்கள்

பால்யத்தில் உறையாத காலத்தை நொந்தபடி வரும்

பாதையெங்கும் நோக்குகையில் பார்வையில் படும்

பறவைகளும் மரங்களும் ஏதோ ஒன்றை வினாவி

விடையொன்றை நல்குவதாய்த் தோன்றும் தோற்றத்தில்

பால்யத்தில் உறைந்துக் கிடக்கிறதிந்த

மூப்படையும் மனிதர்களைத் துரும்பெனக் கொண்டிருக்கும்

மூப்படையாத பிரபஞ்சம்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...