இதோ இந்த மரமும் அதோ அந்த பறவையும்
நர்சரியில் உன்னிப்பாய்க்
கவனித்து வளர்க்கப்பட்ட
மரக்கன்றைத் தீவாந்திரப்
பிரதேசத்தில்
தேமென நட்டு விட்டுச் செல்கிறார்கள்
பல நேரங்களில் நீரூற்ற ஆளில்லாமல்
வெயிலில் வெந்து சாகிறது
சில நெரங்களில் பெருமழையில்
அழுகத் தொடங்குகிறது
விதை போட்டு வளர்த்தவனையும்
நட்டு விட்டுச் சென்றவனையும்
ஒரு சேர ஒரே நேரத்தில் நொந்துக்
கொள்ளும் மரக்கன்று
உங்களை யாரடா வளர்க்க சொன்னது
எங்களுக்கு வளர்ந்து கொள்ளத்
தெரியாதா எனப் புலம்புகிறது
புலம்பலைக் கேட்கும் நோஞ்சான்
பறவையொன்று
அருகில் வரும் போது
வெடித்து அழத் தொடங்குகிறது
எச்சத்திலிருந்து விழுவதை
எல்லாம்
மனிதர்கள் மலட்டு விதைகளாக்கி
விட்ட பிறகு
என்ன செய்வதென்று
கண்ணீர் விட கதியின்றி
தான் நீருக்கு அலையும் கதையைச்
சொல்லி விட்டு
உயரப் பறக்க வலுவின்றித்
தாழ பறந்த படிச் செல்கிறது அந்தப் பறவை
*****
No comments:
Post a Comment