28 Jul 2020

பாதியோடு நிலைத்து விடும் மனநிலைகள்

பாதியோடு நிலைத்து விடும் மனநிலைகள்

            மனநிலைகள் ஏன் அப்பிடி இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் விளக்கி விட முடியாது. அது அப்படித்தான் காலங்காலமாக இருந்து வருகிறது. ஒரு பொருளை விலை குறைத்து வாங்குவது குறித்த மனநிலையும், ஒரு காரியத்தை ஆர்வமாகச் செய்ய விழைவது குறித்த மனநிலையும் எல்லா காலத்திலும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.
            பத்து ரூவாய் பொருள் ஒன்றை ஐந்து ரூபாய் என்று விலை குறைத்து நீங்கள் விற்க நினைத்தாலும் அதை மூன்று ரூபாய்க்கு வாங்கினால்தான் மக்களுக்குத் திருப்தி. ஆக ஐந்து ரூபாய்க்கு விற்க நினைக்கும் பொருளை பத்து ரூபாய் என்று சொன்னால் மக்கள் தானாகவே ஐந்து ரூபாய்க்கு வாங்க வந்து நிற்பார்கள். இது ஒன்று.
            இன்னொன்று விரும்பிச் செய்யும் காரியங்கள் பல பாதி கிணறு தாண்டுவதோடு பகீரென்று கிணற்றில் விழுந்து விடுவது. ஓவியம் கற்றுக் கொள்ளப் போய் பாதியில் நிற்பது, டைப் ரைட்டிங் கற்றுக் கொள்ளப் போய் பாதியில் நிற்பது என்று அந்தக் காலத்திலிருந்து ஆரம்பித்து நிகழ்காலத்தில கம்ப்யூட்டரில் எதாவது கற்றுக் கொள்கிறேன் என்று போய் அது பாதியில் நிற்பது வரை பலவற்றை இது குறித்து சொல்ல முடியும். அது போன்ற இரு விசயங்களைத்தான் இன்று எழுதியிருக்கிறேன்.
விசயம் 1 :
            பத்து ரூவா பொருளைப் பத்து ரூவான்னு சொன்னா யாரு வாங்குறா சொல்லுங்க?
            பத்து ரூவா பொருளை இருவது ரூவா பொருளுன்னு சொல்லி, அதை அதிரடி தள்ளுபடியா பத்து ரூவாய்க்குத் தர்றதா சொன்னா அந்தப் பொருளு உபயோகப்படாத பொருளா இருந்தாலும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வாங்குறாங்க. நம்ம சமூகம் அப்பிடி இருக்கு. நம்ம சமூகத்தோட மனநிலை அப்படி.
            எந்தப் பொருளா இருந்தாலும் கூட வெலை சொல்லி, அதைக் கொறைச்சுக் கொடுத்தாத்தாம் மனசு நெறைவா வாங்குறாங்க. அப்பத்தாம் வாங்குற பொருள்ல ஒரு திருப்தி உண்டாவுது. இது ஒரு நுகர்வு மனநிலையா மாறிப் போயிடுச்சுன்னே சொல்லலாம்னு நெனைக்கிறேம்.
விசயம் 2 :
            ரொம்ப ஆர்வமா கோலம் போட ஆரம்பிக்கிறா நான் பெத்த மவள். அந்த ஆர்வம் இன்னொண்ணு மேல வந்துட்டா, அதெ விட்டுப்புட்டு கோல டப்பாவையெல்லாம் போட்டுப்புட்டு அப்படியே ஓடிப் போயிடுறா. பெறவு அந்தக் கோல டப்பாவையெல்லாம் எடுத்து வைக்கிறது நம்ம வேலையாப் போயிடுது. அது பராவயில்லைன்னு எடுத்து வெச்சாக்கா, "கோலத்தெ பாதியில போட்டுட்டு ஓடிட்டா பாப்பா, மிச்சத்தெ நின்னு போட்டுப்புட்டு கோல டப்பாவெ எடுத்துட்டு வாங்க"ங்றா நம்ம வூட்டுக்கார எசமானி. மவளைப் பெத்தா அப்பாருக்கே தெரியுது கோல டப்பாவுல வரையாம வுட்ட கோலங்கள்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...