எம் புள்ளய இங்கிலீஷ் பேசணுங்றதுக்குத்தாம்
பிரைவேட்டு ஸ்கூல்ல சேத்தேங்றான் சேக்காளி ஒருத்தன்.
சரிடா சேக்காளி! ஒம் புள்ளய இங்கிலீஷ்ல
பேசச் சொல்லுன்னா... அந்த புள்ள வந்து தடுமாறி நிக்குது.
பேசுறதுதாம் வரல. எழுதுறதாவது வருமான்னு
நினைச்சிகிட்டு, நாம்ம சொல்ற விசயத்த அப்படியே ஒரு பிராதுவா இங்கிலீஷ்ல தயார் பண்ணி
எழுதிக் கொடுன்னா புள்ள முகம் செத்துப் போயி பாடையில ஏத்துற மாதிரி ஆயிப் போச்சி.
அத விட முக்கியமா, எம் புள்ள எழுதப் படிக்கத்
தெரியாம போயிடக் கூடாதுன்னுதான் கவருமெண்டு ஸ்கூல்ல சேக்கலேங்றான் இன்னொரு சேக்காளி.
உம் புள்ளய கூப்புட்டு இந்த பேப்பருல உள்ளத
படிச்சுக் காட்டுச் சொல்லுன்னா... அந்தப் புள்ள வந்து நின்னுகிட்டுச் சொல்லுது,
"அங்கிள்! படிப்புன்னா இதப் படிக்கிறதில்ல! எங்களுக்குப் புக்கு கொடுதுதிருக்காங்க!
அதப் படிக்கிறது!" அப்புடிங்கது.
நாம்ம சொல்ற விசயத்தைக் கோர்வையா நாலு
வாக்கியத்துல எழுதிக் கொடுன்னா... அதுக்கும் அந்தப் புள்ள சிரிச்சிகிட்டுச் சொல்லுது,
"அய்யோ அங்கிள்! அங்கிள்! இப்படிப் பட்டிக்காடா இருக்கீங்களே! எழுதுறதுன்னா எங்களுக்குப்
புத்தகம் கொடுத்திருக்காங்க பாருங்க! அதுல உள்ளத எழுதுறது!" அப்படிங்றது.
இதென்னடா காலக் கொடுமையா இருக்கேன்னு
கவருமெண்டு ஸ்கூல்ல படிக்கிற ஒரு புள்ளய கூப்பிட்டுக் கேட்டா, நியூஸ் பேப்பருல உள்ளத
அப்படியே பொளந்து கட்டுற மாதிரி படிச்சுக் காட்டுது. இந்தா இந்த விசயத்தைக் கேட்டுபுட்டு
அப்படியே காயிதத்துல எழுதிக் கொடுன்னு சொன்னா அப்படியே கவிதை மாதிரி எழுதிக் கொடுத்துட்டுப்
போகுது.
அந்த கவர்மெண்டு ஸ்கூலு புள்ள போனதுக்கு
அப்புறம் இந்த பிரைவேட்டு ஸ்கூலு புள்ள சொல்லுது, "பாத்தீங்களா அங்கிள்! புக்குல
உள்ள படிக்கத் தெரியாம என்னிக்கோ வந்த பேப்பர்ல உள்ள படிச்சிக் காட்டி ஒங்கள ஏமாத்திட்டுப்
போவுது அந்தப் புள்ள!"
சரிதான்டா சேக்காளிகளா! உண்மையைச் சொன்னா
கோவப்படுவீங்க! நீங்க இங்கிலீஷ் பேசுறதுக்காவோ அல்லது எழுதப் படிக்கத் தெரியறதுக்காவோ
பிரைவேட்டு ஸ்கூல்ல சேர்க்கல. மார்க்கு வாங்க வைக்கணும், மார்க்க வாங்க வெச்சி கைநிறைய
சம்பாதிக்கிற வேலையில சேர்த்து விடணும்தானே சேத்துருக்கீங்க! அதைச் சொல்லித் தொலையங்களேண்டா
சேக்காளிகளா! என்னமோ இங்கிலீஷைப் புள்ளைகள கத்துக்க வெச்சி அழஞ்சிகிட்டு வர்ற இங்கிலீஷைக்
காப்பாத்துற மாதிரியும், என்னமோ ஒங்க புள்ளைங்களத்தான் எழுதப் படிக்க கத்துக்க வெச்சி
இந்த ஒலகத்துக்கே வழிகாட்ட வைக்கப் போறது மாதிரில்லடா பேசிட்டுத் திரியுறீங்க!
*****
No comments:
Post a Comment