விசித்திர காசுகள்
கட்டணம்
உயர்த்தப்பட்டது அறியாமல்
கையில்
இருக்கும் காசுக்கு
பயணச்சீட்டு
கேட்டுக் கொண்டிருப்பவரும்
கடந்த
முறை கட்டண ஞாபகத்தில்
சமையல்
எரிவாயு உருளையை
இறக்கிக்
கொண்டிருப்பவரும்
நள்ளிரவில்
ஏறிய விலை அறியாமல்
வாகன
எரிபொருள்
நிரப்பிக்
கொண்டிருப்பவரும்
தூக்கத்தில்
கண்ட கனவிலிருந்து
விழித்தெழுந்து
வீறிட்டு அழும் குழந்தையென
இல்லாத
காசுக்குப் புலம்பியழுதுச் செல்கின்றனர்
பொக்கிஷத்தைப்
புதைத்து வைப்பது போல
பிச்சைக்காரர்கள்
தங்கள் திருவோட்டை
கக்கத்தில்
வைத்து மறைத்துக் கொள்கின்றனர்
ஆயிரம்
பேரைக் கொன்ற அரை வைத்தியன் போல்
கசப்பு
மருந்தைக் கொடுத்ததாகக் கூறி
தலைவர்கள்
தூக்க மாத்திரையின்றி
உறங்கிப்
போகின்றனர்
சுவிஸ்
வங்கியின் கருப்புப் பணத்தைக்
கனவு
காணும் மக்கள் பெருங்கூட்டத்துக்கு
கையிலிருக்கும்
காசுகள் காணாமல் போவது
விசித்திரமாகத்தான்
இருக்கின்றது
*****
No comments:
Post a Comment