7 Dec 2018

ரகசிய மொட்டின் நறுமணம்


ரகசிய மொட்டின் நறுமணம்
முடியுமானால் முத்தத்தைத் திருடிக் கொண்டு
ஓடி விடு என விரட்டியவள் நீ
வெளியில் சொல்ல வெட்கப்படுவேன் என
நினைத்த உன் தைரியக் கணிப்புத் தவறாகி விட்டது
காற்றிடம் சொல்லாத ரகசியத்தை
ஒளி முன் ஒப்படைக்காத காட்சியை
இருட்டுச் சூன்யத்தில் ஒளிந்த கடுங்கருப்பை
விண்மீன்கள் பறித்து மேகத்தில் தூவி விட்டன
களவுமழைப் பொழிந்து செழித்த
பூக்களில் மலர்ந்த நறுமணத்தை
முத்தத்தின் வாசனையென கண்டு கொண்டு
சண்டையிட வரும் போது
விரட்டியவளே நீ தேடிக் கண்டுபிடிக்க
முயற்சித்துக் கொண்டேயிரு
அகப்படாமல் தப்பித்து நான்
உன்னிலன்றோ ஒளிந்திருப்பேன்
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...