எழுதுவதன் ரிஷிமூலம்
எதை எழுதத்
தோன்றுகிறதோ அதை எழுதுகிறார் எஸ்.கே.
பிரசுரம்
ஆவதற்காக எல்லாம் தனியாக அவர் எதையும் எழுதுவதில்லை.
மறந்து
போனது போக மிச்சம் இருப்பதில்தான் அவர் எழுதுகிறார், பேசுகிறார். மிச்சத்தில் அதன்
எச்சத்தில் வாழ்பவர் அன்றோ அவர்.
*****
அறியாமையின் அறிதல்கள்
"என்ன
நிகழப் போகிறது என்று தெரியாத அறியாமையால்தான் உலகம் இன்னும் பயபக்தியோடு இருக்கிறது.
ரகசியங்கள்
ரகசியங்களாக இருக்கும் வரைதான் அதற்கு ஒரு மரியாதை கிடைக்கும்.
எதிலும்
உண்மையை அவசரப்பட்டு வெளிபடுத்தி விடக் கூடாது. நிதானமாகவும் வெளிபடுத்தி விடக் கூடாது.
பொக்கிஷங்களைப் பாதுக்காப்பதைப் போல் பாதுகாவல் செய்ய வேண்டியிருக்கிறது.
வெளிப்படையான
தன்மையோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். நிஜமாகவே அப்படி இருக்க முடியாது.
செயல்களுக்காக
மனிதர்களைப் பலி கொடுத்து விட வேண்டாம்."
இப்படி
எழுதி முடித்த பின் நிம்மதியாக உறங்கத் தொடங்கினார் எஸ்.கே.
*****
No comments:
Post a Comment