சோதரரே பரிதாபம் காட்டிக் கொள்ளுங்கள்
தன்
பயம் சந்தேகத்திற்காக
மற்றவர்களைப்
படுத்தி எடுக்கும்
மோசமானப்
பிசாசைக்
கடைசியாக
எப்போது சந்தித்தீர்கள்
நான்
தினம் தினம் சந்திக்கிறேன்
பிசாசு
வேலைகளைச் செய்து கொண்டு
தெய்வம்
போலொரு கருணையை
எதிர்பார்ப்பவரிடம்
என்ன சொல்வது
நான்
உங்களுக்கு மேல் இருப்பவரைச் சொல்லவில்லை
உங்களுக்கு
வீடு வாடகைக்கு விட்டிருக்கும்
வீட்டுக்காரரைச்
சொல்லவில்லை
வாழ்க்கைத்
துணையையும் சொல்லவில்லை
ஒவ்வொருவர்க்கும்
அப்படி ஒருவர் உண்டு என்று
பெருமலையிலிருந்து
உருண்டு விழுவது போன்ற
கண்ணீர்
மல்கக் கதறிச் சொல்கிறேன்
நீங்கள்
அவரைச் சந்திக்க மறுத்தாலும்
அவர்
உங்களைச் சந்திப்பார்
அவருக்கு
இரக்கம் காட்டும் முன்
உங்களுக்கு
இரக்கம் காட்டிக் கொள்ளுங்கள்
கிளைமாக்ஸில்
பரிதாபத்திற்கு உள்ளாவது
நீங்களாகத்தான்
இருப்பீர்கள் என்பதால்
*****
No comments:
Post a Comment