11 Dec 2018

நீதி போதனை


நீதி போதனை
ஒரு மணி நேரம் விரைவாக விட்டாலும்
ஐந்து நிமிடம் தாமதமாகப் புறப்பட ஒப்புமா மனம்
மிகு தந்திரம் சுயநலம் மனத் திருப்திக்காக
எந்த அளவுக்கும் புலம்பிடத் தயார்
என்ன வேலை இருக்கிறது
தாமதமாகப் போனால்தான் மதிப்பு
உட்கார்ந்து கிளம்பிடும் சூட்சுமம்
பொதுவாகக் கொஞ்சம் பயம் இருக்கும்
அதுவும் போய் விட்டது
தவறுக்குக் கூட வர நான்கு பேர் இருப்பர்
ஆட்டம் தொடரும் தொடரட்டும்
மனசாட்சி அடித்து நோயில் வீழ்த்தும் காலம் வரும்
*****

No comments:

Post a Comment