பாரம் சுமப்பவர்கள்
நினைவுகளைச்
சுமக்க முடியாமல்
தூர
எறிந்தவன் என்று பழித்திடுவாயோ என
அஞ்சி
அஞ்சி பாரம் சுமக்கும் ஒருவனை
நீ
அறிய மாட்டாய்
பழித்திடும்
என நினைக்கும் நீ
அறிவதற்கு
வாய்ப்பில்லை என அறிந்தும்
சுமப்பவனிடம்
என்ன சொல்லி
பாரத்தை
இறக்கி வைப்பது
சுமப்பது
அவனுக்குப் பழகி விட்டதா
இயல்பாகி
விட்டதா
அதையிதையென்று
எதையும் அறியாத வாழ்வு
உனக்கு
அமைந்து விட்டது என்ற முடிவோடு
அமைதியா
ஆறுதலா என புரியாத
மன
சமாதானம் கொண்ட நாளில்
பாரம்
சுமப்பவனை வருந்தி அழைத்தாய்
அந்தச்
சந்திப்புக்குப் பின்
இன்னும்
கொஞ்சம் பாரம் சுமந்து வந்தவனைப்
பார்த்த
பின் அழுது தீர்த்தேன்
பாரம்
சுமப்பவர்கள் தப்பித்தல் எளிதன்று
*****
No comments:
Post a Comment