மகா மட்டமான நடிகர்
எஸ்.கே. ஒருநாள்
தனது அன்பர்களிடமிருந்து 'நடிக்காதே!' என்ற வார்த்தையை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது.
அவர் அப்படி எதிர்கொண்ட பிறகு அவரிடமிருந்து அவரைச் சுற்றியிருந்தவர்கள் புலம்பல்களை
எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. இது வழக்கமான ஒன்றுதான் என்ற போதிலும் இம்முறை வெள்ளம்
போல் ஒரு பிரவாகம். அவர் புலம்பிய ஒரு மில்லியன் புலம்பல்களிலிருந்து ஒரு சில புலம்பல்
துளிகள் ...
''நான் எங்கே
நடிக்கிறேன்? நான் எனக்குத் தோன்றும் இயல்பின்படிதான் நடிக்கிறேன். ஆனால் நடிக்கிறேன்
என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டியதாகி விடுகிறது. வித்தியாசமானப் பட்டம்தான்.
நான் எதற்கு
நடிக்க வேண்டும்? நடிப்பதற்கான எந்த அவசியமுமில்லை. ஒருவரை நிர்பந்தபடுத்தும் போது
அவர் அந்தச் சொல்லைத்தான் சொல்கிறார். தனக்குப் பிடித்த விதத்திலே சகலமுமாக நடந்து
கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவர் அந்த வார்த்தையைச் சொல்லித்தான் காயம்
செய்கிறார். பல விதங்களில் ஒத்திசைவாக அவரோடு நடந்து கொள்ளலாம். ஆனால் ஒரு சாதாரண
விசயத்தில் ஒத்திசைவு இல்லாமல் நடந்து கொண்டு விடும் போது அதற்காக அவர் செய்யும்
காயமே நடிக்காதே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது. பயன்படுத்தும் அவருக்கு அது சாதாரணமான
வார்த்தையாகத் தெரியலாம். கேட்பவருக்கு அது அசாதரணமான வலியைத் தருகிறது.''
*****
அனாதை வைரஸ்கள்
ஊ என்று சொல்கின்ற துறைக்கும், கா என்று
சொல்கின்ற துறைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கா என்று சொல்கின்ற துறை
அனுமதிக்கின்ற செய்திகளைத் தாண்டி ஊ என்று சொல்கின்ற துறை எங்கே எதை வெளியிடும்? அதைத்
தாண்டி உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால் ஒன்று அந்த உண்மை வைரலாக வேண்டும். அல்லது
ஊ என்று துறையைச் சார்ந்தவர்களுக்கு கா என்ற துறையைச் சார்ந்தவர்கள் மீது தனிப்பட்ட
காழ்ப்புணர்ச்சி இருக்க வேண்டும்.
வைரலாகாத உண்மைகள் பாவம்தான். அவைகள் வெளிவருவதற்கு
வாய்ப்பே இல்லை. நிறைய உண்மைகள் வைரலாகாமல் அனாதைகளாகி இருக்கின்றன.
உங்களால் கிசுகிசு எழுத முடியுமா என்று
எஸ்.கே.விடம் கேட்டார்கள். அவர் மேற்படி எழுதிக் கொடுத்தார்.
*****
No comments:
Post a Comment