1 Oct 2018

சிட்டுக்குருவிகளின் விலாசம்


சிட்டுக்குருவிகளின் விலாசம்
எங்கே சென்றன சிட்டுக்குருவிகள்?
சிட்டுக்குருவிகளை அழைத்து வர முடியுமா?
கொஞ்சிப் பேச வேண்டும்
அனாதை இல்லமோ
முதியோர் இல்லமோ
தொலைந்துப் போனவைகள்
ஏதோ ஒரு இல்லத்தில் இருக்கக் கூடும்
சிட்டுக்குருவிகள் வாழ்
இல்ல விலாசம் சொன்னால்
நன்றாக இருக்கும்
உங்களிடம் இருந்தால்
விலாசமற்ற இவனின்
விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள்
புண்ணியமாய்ப் போகும்
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...