19 Aug 2018

கைக்கூலிகளாகிய நாம்!


கைக்கூலிகளாகிய நாம்!
நாம் பயிரிடுவது என முடிவெடுத்தப் பின்
மலட்டு விதைகள் தரப்பட்டன
நாம் கனிகளை உருவாக்கியதற்காக மகிழ்ந்தோம்
உங்கள் மலடித் தாய்களை விற்று வாருங்கள் என
பணிக்கப்பட்டோம் காத்திரமாக
கேள்விகள் கேட்கும் ஒவ்வொருவர் நாவிலும்
ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டிருந்தது
நாம் என்ன செய்வோம் பாவம்!
நான்கு வாட்டர் பாக்கெட்டுகளில்
வழங்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு
விவசாயத்தைச் செய்து முடிக்க பயிற்றுவிக்கப்படுவோம்
நாம் விவசாயிகள் அல்ல
இயற்கையைக் கொன்றழிக்க துணை நிற்கப் போகும் கைக்கூலிகள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...