1 Aug 2018

நாற்காலிகளைக் கேலி செய்ய முடியாது!


நாற்காலிகளைக் கேலி செய்ய முடியாது!
எல்லாரும் சென்ற பின்
தனக்காக அடித்துக் கொள்ள
யாருமில்லை என்று
கேவிக் கேவி அழுதபடி
மனிதர்கள் இருக்கும் வரை
நான்கு கால்களில் ஒன்று முறியும் வரை
தனக்கு ஓய்வில்லை என
ஆறுதல் கொள்ளும் காலி நாற்காலி
விடியலைக் கடக்கும் வரை
ஏகாந்தத் தனிமையில் கழியும் பொழுதுகள்
பகல் பத்து மணி உச்சத்தில்
தலைகீழாக மாறினாலும்
சூத்தைத் தாங்குவதே நாற்காலிகள் என
அவைகளைக் கேலி செய்ய முடியுமா?
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...