2 Jul 2018

காலக் கணக்குகள்

காலக் கணக்குகள்
ரவியும் தியாவும் மிக மிக நல்லவர்கள்
விவாகரத்து வாங்கிக் கொண்டார்கள்
மிக மிக நல்லவர்கள்
ஏன் விவாகரத்து வாங்கிக் கொண்டார்கள்
என்று கேட்கப்பட்டதற்கு
மிக மிக கெட்டவர்கள் என்றால்
ஒன்றாக இருந்து குடும்பம் நடத்தியிருப்பார்கள்
என்ற பதில் சொல்லப்பட்டதும்
காதலில் விழுந்து லிவிங் டுகதெரில் இருந்த
நவீனும் இஷாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்
தாம்பத்திய கசப்புகள்
பேப்பராக மாற்றப்படும் என்று
தன் பங்கிற்கு விழுந்து விழுந்து சிரித்த
கால தேவனின் கையில் இருந்தது
நவீன் இஷாவின் திருமணப் பத்திரிகையும்
அதற்குப் பிறகான விவாகரத்து நோட்டீசும்
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...