ஒரு எட்டு போய் வாருங்கள்!
மன்னார்குடி பொருட்காட்சி மைதானத்தில்
முதன் முதலாக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்னும் அங்கே
புத்தக் கடைகள் பொருட்காட்சிக் கடைகளில் ஒன்றாக இருந்ததுண்டு. இம்முறை அனைத்துக் கடைகளும்
புத்தக அரங்குகள்.
கூட்டம்தான் குறைவாக வருவதாக கவலைபட்டுக்
கொண்டார்கள் புத்தக அரங்க அமைத்திருந்தவர்கள். புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டப்
பிறகு அந்தச் சாலை கூட வாகன நெரிசல் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது போலதான் இருந்தது.
இரவு சுமார் ஏழு மணி வாக்கில் சிலர் வருகிறார்கள்.
மற்ற நேரங்களில் தனிமையில் இருப்பதைப் போல உணர்வதாக அவர்கள் சொன்னது வருத்தமாக இருந்தது.
வரும் ஒரு சிலரிலும் புத்தகம் வாங்காமல்
செல்பவர்களைக் கணிசமாகப் பார்க்கக் கிடைத்தது. புத்தகம் வாங்காவிட்டாலும் பார்க்கவாவது
ஆளிருக்கிறார்களே!
கனமான வாசிப்பிலிருந்து, இலேசான வாசிப்பு
வரைக்குமான அனைத்துத் தரப்பு புத்தகங்களும் அரங்கில் இருக்கிறது.
நான் சென்ற நேரம் நல்ல இடி, மின்னல், மழை.
அத்தி பூத்தாற் போல் ஆட்கள் சென்றால் இப்படித்தான் ஆகும் போலிருக்கிறது.
மழைக்காகப் பள்ளிக்கு ஒதுங்கியவர்கள் போல
மழைக்காகவேனும் எவரேனும் ஒதுங்குவார்களா என்று பார்த்தால் ம்ஹூம்!
வாங்கியப் புத்தகங்களையெல்லாம் மழையில்
நனையாத வண்ணம் பதாகைகளை வைத்து சுற்றிப் பண்டலாக் கட்டி அவர்களே கொடுத்தார்கள்.
புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பிய
பிறகு மழையில்லை. அரங்கிலும் ஆளில்லை.
இன்று 16.06.2018 சனி, நாளை
17.06.2018 ஞாயிறு. இன்னும் இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி இருக்கிறது.
மன்னார்குடி மக்கள் மனது வைத்தால் ஒரு
எட்டு பார்த்து விட்டு வரலாம்.
*****
No comments:
Post a Comment