உச்சம் பார்ப்பவன்
விசாரணைக்குச்
செல்வதற்கு முன்
ஜட்ஜூக்கு
ஜாதகம் பார்க்கப் போவதாக
ஊரெல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தான்
நீண்டு
வழிந்த தாடியை
ஒரு
கையால் உருவிக் கொண்டு
மறு
கையில் பீடியை வழித்துக் கொண்டு
கஞ்சா
கேஸில் சிக்கிய
துண்டுபீடிக்காரன்
என்ற மதனமுத்து
அப்படி
இப்படிப் போய் வருவது
மனதுக்கு
இதமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டவன்
நாலு
இடங்களுக்குப் போய் வந்தாத்தான்
நாலு
விசயங்களை எடுத்துப்
பையில்
போட்டுக் கொள்ளலாம் என்றான்
நாலு
அனுபவங்கள் கிடைத்தால்தான்
நாலு
பேரை மடக்கலாம் என்றான்
ஜெயிலுக்குப்
போகாமல்
பெரிய
மனுசன்களின் தொடர்பு கிடைக்காது என்றவன்
என்
ஜாதகத்தில் எல்லாம் உச்சம் என்றான்
நல்லது
கெட்டதுகளில் உச்சம் பார்த்தவன் என
ஒரு
மழை நாளில் அவனைத் தேடிய போது
எட்டாண்டு
கடுங்காவல் சிறையில் இருப்பதாக
அவனைப்
பற்றி பேசிக் கொண்டார்கள்
அச்சோவெனப்
பெய்து கொண்டே இருந்தது
நெடுநாளைக்குப்
பின் நிற்காத மழை
*****
அருமையான வரிகள்
ReplyDeleteதொடருவோம்!
நன்றிகள் ஐயா!
Delete