8 Mar 2018

ஹாரன்கள் ஒலிக்கின்றன


ஹாரன்கள் ஒலிக்கின்றன
மொய்த்துக் கொண்டிருக்கும்
எறும்புக் கூட்டம்
கொலைக்கான தடயத்தை
நக்கிக் கொண்டிருக்கின்றன
இரத்தக் கவிச்சி வீசும் காற்று
அவ்விடம் வருவோர்களிடம் சொல்ல
எத்தனித்துப் பார்க்கிறது
எதுவும் நடக்காதது போல்
பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன
மர்மங்கள் துலங்காமல்
மறைந்து போன மனிதர்கள்
அமானுஷ்யக் காட்டில்
அதிக எண்ணிக்கையில்
உலவிக் கொண்டிருக்கிறார்கள்
சிறிது தொலைவிலுள்ள
நெடுஞ்சாலையில் வாகனங்கள்
சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன
சாப்பறையைப் போல
ஹாரன் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது
*****

No comments:

Post a Comment