ராஜாவின் அந்தப்புரம்
திரைப்படக்
காமம்
கிளுகிளுப்பூட்டுகிறது
திரையரங்கை
ஒட்டியிருக்கும்
பெட்டிக்
கடையில் ஆணுறை வாங்கிக் கொள்கிறான்
புட்டி
மதுவை ஊற்றிக் கொண்டு
கனவின்பத்தைக்
காண்பவன்
சில
நிமிடங்களின் தளர்ந்து விடுகிறான்
வீட்டில்
அவனது பிரஜைகள்
அவனை
எதிர்பார்த்துத் தளர்ந்து கிடக்கிறார்கள்
சட்டைப்
பையிலிருந்து
எடுத்துப்
போடும் இருபது ரூபாயைப்
பகிர்ந்து
கொள்கிறார்கள் பிள்ளைகள்
அவனோ
பெருவிருந்து உண்டவனைப் போல
உறங்கிப்
போகிறான்
பட்டினி
விரதம் இருக்கத் தொடங்குகிறாள்
அவன்
தர்மபத்தினி.
*****
No comments:
Post a Comment