தமிழ் நிலத்தின் சாபக்கேடுகள்
மக்களை மயக்குகிற எழுத்து மக்கள் இலக்கியமாகி
விட முடியுமா? முடியும் என்றால் மக்களை மயக்குகிற டாஸ்மாக் பானம் தேசிய பானமாகி இருக்க
வேண்டும். காலத்தின் போக்கு அப்படியொரு அச்சத்தை விதைத்துக் கொண்டு போவதையும் மறுப்பதற்கில்லை.
சமூக மாற்றம் நிகழ்ந்தால்தான் அவன் எழுத்தாளனாகக்
கொண்டாடப்படுவான். இல்லையேல் அவன் ஒரு பொழுது போக்குக் கலைஞன் மட்டுமே.
இங்கு என்ன நிகழ்கிறது, என்ன நிகழ்த்தப்படுகிறது
என்றால்...
பொழுது போக்குக் கலைஞர்கள் சமூக மாற்றம்
நிகழ்த்திய எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை மீறிய அங்கீகாரம் தங்களுக்கும்
கிடைக்க வேண்டும் என்று பேராசைப்படும் காலகட்டத்தில் சிக்கி மூச்சு திணறுகிறது தமிழ்நிலம்.
தமிழுக்கு ஆபத்து நேரப் போகிறதென்று சொல்லிக்
கொண்டு, தங்கள் சம்பாத்தியத்திற்கு ஆபத்து நேராமல் சாமர்த்தியமாக எழுத்துப் பிழைப்பு
செய்பவர்கள் எழுத்தாளர்களாகக் கொண்டாடப்படும் அவலம் தமிழுக்கே நேர்ந்த பரிதாபம்.
தமிழ் இனத்தை தமிழ்ச் சாதியாக்கி, அத்தமிழ்ச்
சாதியைத் தன்னம்பிக்கை குறைந்த இனக்குழு கூட்டமாகக் கருதி அவர்களுக்குத் தன்னம்பிக்கைத்
தருவதையே எழுத்தாக எழுதுவதை எழுத்தாக அங்கீகரிக்க வேண்டும் என்று பத்தாம் பசலித்தனம்
செய்பவர்களே தமிழில் எழுத்தாளர்களாக, தமிழ்ப் பேச்சாளர்களாக அறியப்படுகிறார்கள்.
ஆண்-பெண் கவர்ச்சிக்கு அலைபவர்களாக, அந்தக்
கவர்ச்சியைச் சொல்லால் மயக்குபவரையே ஒரு எழுத்தாளராக...
காதலிக்கத் தெரியாதவராகக் கருதி காதலிக்கச்
சொல்லித் தருவதையே ஒரு முழு நேர எழுத்தாக...
குவியும் இக்குப்பை எழுத்துகளை நோக்குகையில்...
எழுத்தின் மூலம் விழிப்புணர்வும், சீர்திருத்தமும்
நிகழாமல் போய் விடும் பேரவலமும் தமிழ் நிலத்திற்கே உரிய சாபக்கேடுதான் போலிருக்கிறது.
*****
No comments:
Post a Comment