மனத்துக்குள் வாழ்தல்
இந்த லோகத்தில் நாம் ஒன்று சொன்னால்
அவர்கள் ஒன்று செய்வார்கள். அதாவது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்ததான் செய்வார்கள்.
யார் சொல்வதைச் செய்யவும் யாரும் பிரியப்படுவதில்லை.
அவர்கள் செய்வதைச் செய்கிறார்கள். சொன்னதை
ஏன் செய்யவில்லை என்றால் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அவர்கள் செய்ததுதான் சரி என்று
உலக மகா வாதங்களை அடுக்குவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் எதுவும் சொல்லாமல் இருப்பதுதான்
நல்லது. நாமும் எதுவும் சொல்லவில்லை, அவர்களும் அதனால் செய்யவில்லை என்ற மனநிம்மதியாவது
இருக்கும்.
எஸ்.கே. இப்படித்தான் காலத்தை ஓட்டி வருகிறான்.
யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவன் காலம் ஓடுகிறது.
மனதிற்குள் எதை வேண்டுமானாலும் நினைத்துக்
கொள்கிறான். கோபப்பட்டுக் கொள்கிறான். திட்டிக் கொள்கிறான். கேவலமாக கருதிக் கொள்கிறான்.
பரிகாசம் பண்ணிக் கொள்கிறான். எல்லாம் மனதிற்குள்ளாக, மனதிற்குள்ளாக மட்டுமே. எதையும்
வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு பகை கொள்ளவும், பழி
தீர்க்கவும் இந்த மனிதர்கள் மிக மோசமாக தயாராக இருப்பதாக எஸ்.கே. கருதிக் கொண்டு
இருக்கிறான்.
*****
No comments:
Post a Comment