இருளைத் தேடும் ஆசைகள்
இரவுக்கு இருளைப்
பாலூட்டும்
இனிய பொழுதில்
முத்தம் நிலாவென
ஜொலித்தது.
சின்ன சின்ன
உரசல்கள், தழுவல்கள்
விடிவெள்ளி
தோன்றி விட்டதன்
அறிகுறி காட்டின.
முயங்கிக்
கிடந்ததன் முடிவில்
பகலென விரிந்த
வெளிச்சத்தில்
மீண்டும் மண்டிக்
கொண்டன
இருளைத் தேடும்
ஆசைகள்
நட்சத்திரங்களைப்
போல
பல்லாயிரம்
பல கோடி என.
*****
No comments:
Post a Comment