குழிப்புண்காரர்கள்
குறிப்பிட்ட சில நேரங்களில் மனச்சோர்வு
ஏற்படுவது இயல்பானது. அதை மனதிற்கான ஓய்வு காலமாக எண்ணிப் பொறுமையாக இருப்பவர்கள்
பாக்கியசாலிகள்.
நான்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற
ஆணவப் போக்கைப் போல எனக்கு எதுவும் தெரியாது என்ற தாழ்வு மனப்போக்கும் மனச்சோர்விற்குக்
காரணம் அன்றோ!
நினைத்தால் செய்து விட வேண்டும் என்ற பிடிவாத
மனப்போக்கும், இயலாவிட்டால் மனச்சோர்வு அடைவதும் இன்றைய நூற்றாண்டு மனதின் இயல்பாகி
விட்டது அல்லோ!
மனச்சோர்வைக் கண்டு கொள்ளாமல் விட்டு
விடுவதே மாமருந்து. அதைக் கண்டு கொண்டு குணப்படுத்துகிறேன் பேர்வழி என்று அவைகளோடு
எதிர்மறை எண்ணங்களையும் சேர்த்துக் கொள்பவர்கள் இல்லாமலா இருக்கிறார்கள்?
அவர்களின் நிலை ஆபத்துதான். மனதின் ஆபத்தான்
அறிகுறி அது. அவர்களுக்குக் கட்டாயம் மருத்துவம் தேவை. சாதாரணப் புண்ணைத் நோண்டி நோண்டி
குழிப்புண்ணாக்கி விட்டால், மருந்து வைப்பதைத் தவிர வேறு மார்க்கமுண்டோ என்ன?
*****
No comments:
Post a Comment