6 Sept 2017

அரை வேக்காட்டுப் பாடங்களின் பின்னணி

அரை வேக்காட்டுப் பாடங்களின் பின்னணி
            இந்த மனுசப் பயல்களின் பேட்டிகளைப் பாருங்கள்!
            கேள்வி ஒன்றாக இருக்கிறது. பதில் வேறொன்றாக இருக்கிறது. வார்த்தைகளில் அதன் ஜாலங்களில் ஜகதள பிரதாப தப்புத் தாளங்கள் போடுகிறான். அந்தத் தாளங்கள்தான் கேட்கின்ற மனுசப் பயல்களுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ? வரிந்து கட்டிக் கொண்டு கை தட்டி ரசிக்கிறான். கொட்டாவி விட்டுக் கொண்டே வாய் பிளந்து கேட்கிறான்.
            இன்னும் இன்னும் தன்னைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் ஒரு மனுசப் பயல் பேசினால் ஆகா இதுவே தன்னம்பிக்கை என்கிறான்.
            தன் சாதியத்தை எழுதித் தீர்த்துக் கொண்டு, தன் சமூகத்தைப் பதிவு செய்து வரலாற்று ஆவணம் சமைத்து விட்டதாக பெருமைப் பேசித் திரிகிறான்.
            திறனாய்வு எழுதுவது போல புனைவியலை எழுதித் திட்டித் தீர்க்கிறான். திட்டுதல்களின் மர்ம சுகத்தில் திளைக்கும் மனுசப் பயல்கள் அதை மாவீரமாய்க் கருதி சிலாகித்து சுகம் காண்கிறான்.
            ஒரு மனித எழுத்தாளன் சொல்லும் அந்த ஒற்றைப் புள்ளியோடு புரிதல் முடிந்து விடுமோ? முடியாதுதானே. முடியாத அந்தப் புள்ளியிலிருந்து வாசகன் விரிவடைய வேண்டுந்தானே. அவனை விரிவடைய இந்த மனுச எழுத்தாளர்கள் விடுவார்கள் என்கிறீர்கள்?
            அதனால்தானோ என்னவோ இயற்கையிடம் பாடம் படிப்பவர்கள் அதி புத்திசாலிகளாகி விடுகிறார்கள். இயற்கையிடம் பாடம் படித்த அரை வேக்காடுகள் இதுவரை உருவாக வில்லை. இனியும் உருவாக மாட்டார்கள். மனுசப் பயல்களிடம் பாடம் படிப்பவர்களுக்கு அப்படி ஓர் உத்திரவாதத்தைத் தர முடியுமா என்பது தெரியவில்லை.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...