அமைவதை ஏற்றுக் கொள்வதா? அமையாததை அமைத்துக்
கொள்வதா?
வருவதை ஏற்றுக் கொண்டால் வாழ்வில் எந்தப்
பிரச்சனையும் இல்லை என்பார்கள். அதை ஏற்றுக் கொள்ளாமல் வாழும் போதுதான் எல்லா பிரச்சனைகளும்
ஏற்படுகின்றன என்பது போல கருத்தும் சொல்வார்கள்.
கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைச் சுமக்கும்
போதுதான் வாழ்வு சுமக்க முடியாத கனமாகிறது. அதை நாம் ஏன் சுமக்க வேண்டும்? நாம் பாட்டுக்கு
அடுத்தடுத்த வேலைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தால், அப்படிப்பட்ட ஏக்கங்கள் எதுவும்
மனதில் தோன்றாது.
மனதில் ஏக்கங்கள் படியா விட்டால் வாழ்க்கை
எப்போதும் புதிததாக இருக்கும். நம் ஏக்கங்கள் நாளடைவில் கவலைகள் ஆகின்றன. கவலைகள்
நம்முடைய புத்துணர்ச்சியைத் தின்று அழிக்கின்றன.
ஓய்வின்றி எப்போதும் ஒரு கவலைப்படும்
இயந்திரம் போல் ஆகி செயலிழந்துப் போய் விடக் கூடாது.
எல்லாம் நம் வாழ்வதற்காகத்தான். வாழ முடியாமல்
போன ஏக்கத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல. எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது போல் கிடைத்தால்தான்
வாழ்வு என்று கிடைத்தற்கரிய வாழ்வு கிடைத்திருப்பதை உதாசீனப்படுத்தி விடக் கூடாது.
உதாசீனங்கள் அவசரத்திலும், பொறுமையிழப்பிலும்
கருவாகக் கூடியவைகள். கூடிய வரை மன அமைதியோடும், மன ஓய்வோடும் இருக்கும் வகையில்
நம்மை நாம் மறுஉருவாக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மனித குல சாதனைகளும், ஆச்சர்யங்களும் ஏதோ
ஒரு புகழ் மற்றும் பெயர் சார்ந்த போதை ஊடாடும் ஒரு கருத்தியலுக்காக அல்ல, அது மனித
குல நன்மைக்காகவே.
நல்ல ஒரு வாழ்வை வாழவும், நாம் வாழ்கிற
வாழ்வு நல்லது என புரிந்து கொள்ளவும் சரியான புரிதல் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும்
அவசியம். அமைதியும், நிதானமும் அதற்கு உதவக் கூடியவைகள்.
அமைதியும், நிதானமும் மகாசக்திகள்.
*****
No comments:
Post a Comment