24 Sept 2017

நியூட்டனின் நான்காம் விதி

நியூட்டனின் நான்காம் விதி
குளக்கரையிலிருந்து எறிந்த கல்
ஒவ்வொன்றாக மூழ்கிக் கொண்டிருக்கிறது
தலை மேல் விழுந்த ஆப்பிளை
நியூட்டன் ஆராய்வது போல்
அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான்
கவலைகளின் கனத்தால்
கற்கள் மூழ்குவதாக
ஒரு முடிவுக்கு வந்தவனாய்
எழுந்து சென்றான்
அன்றிலிருந்து
ஒவ்வொரு கவலைக்கும்
ஒவ்வொரு கனம் உண்டு என்ற
நியூட்டனின் நான்காவது விதி
பிரபலமானது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...