எச்சரிக்கை ப்ளீஸ்!
குறைகளைச் சுட்டிக் காட்டும் போது கவனம்
தேவை. மிகவும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி விடாதீர்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு
கருகருவென்று இருப்பவர்கள் ஏராளம்.
மறைமுகமாக அதே நேரத்தில் நாசுக்காக சுட்டிக்
காட்ட முடியுமானால் செய்யுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள். பொதுவாக எல்லாரையும்
பாராட்டி பேசி விடுங்கள். அதுவே நல்லது.
எப்போதோ சொன்ன அறியாத ஒரு வார்த்தைக்காக
பல ஆண்டுகள் மறக்காமல் அதை மனதில் வைத்து பழிவாங்கிய ஆத்மாக்கள் நிரம்பிய ப(பு)ண்ணிய
தேசத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள்.
சிலரை நம்பி காரியங்களில் இறங்கி விடாதீர்கள்.
பெருந்தன்மையாக இல்லாத ஒருவன்,
சந்தேகப்புத்தி அதிகம் உள்ள ஒருவன்,
சோம்பேறித்தனம் மிகுந்த ஒருவன் - இவர்கள்
மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை நம்பி எதிலும் இறங்கி விடாதீர்கள். இவர்கள் எதையும்
மாற்ற விரும்ப மாட்டார்கள். ஆனால் செயல் என்பது ஒன்றை மாற்றிப் போடும். செயல்பட்டதற்காகாவே
அவர்களிடம் நீங்கள் எதிரியாக நேரிடும். அவர்கள் சுறுசுறுப்பாக மாற்றங்களை எதிர்ப்பார்களே
தவிர ஆக்கப்பூர்வமான விசயங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே
உங்களையும் விரும்ப மாட்டார்கள்.
*****
No comments:
Post a Comment