சூக்குமத்தைச் சொல்கிறேன்... ரகசியம்!
ஏன் இவ்வளவு கோபம்? அதுவும் பயங்கர கோபம்!
எம்.கே. செய்வது எஸ்.கே.விற்கு சமயத்தில் பிடிக்க மாட்டேன்கிறது. அதற்கு எஸ்.கே. என்ன
செய்ய முடியும்? பெருங்கோபத்தை அப்படியே விட்டு விடுவதா?
எம்.கே.விற்குத் தெரிந்ததை அவன் செய்கிறான்.
எஸ்.கே.விற்குப் பிடிக்கக் கூடாது என்பதற்காகவே அவன் செய்கிறான். எஸ்.கே.விற்குத் தெரிந்ததை
அதாவது பெருங்கோபப்படுவதை அவன் செய்கிறான்.
அப்படியே செய்யட்டும். அப்படியே ஆகட்டும்.
இது ஒரு சூக்குமமான விசயம். இருவரையும்
ஆறப் போடுவது எளிதல்ல. ஓர் அசம்பாவிதம் அவர்களை மிக எளிதாக ஆறப் போட்டு விடும்.
இந்த உலகில் எல்லாம் நன்மைக்கே. அது அப்போது
தெரியாது. ஆனால் பிற்பாடு தெரியும்.
ஏதாவது நிகழ்வதற்கு முன் காப்பாற்ற முடியாதா?
மிக எளிதாகக் காப்பாற்றலாம். அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்களா என்பதுதான் கேள்வி.
ஏன் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்? என்று
நீங்கள் கேட்கலாம். சூக்குமத்தை எடுத்துக் கொள்வது எளிதானதா?
எம்.கே., எஸ்.கே.வை விடுங்கள். எங்களுக்கு
அந்தச் சூக்குமத்தைத் தரக் கூடாதா என்கிறீர்களா? இந்த இடத்திற்கு வருவதற்குதான் நீங்கள்
எஸ்.கே. & எம்.கே. பிரச்சனையைக் கையில் எடுக்கிறீர்கள் என்பது தெரியாததா என்ன?
ஆனாலும் சூக்குமத்தைச் சொல்வதில் தடையேதுமில்லை.
பொறுமைதான் அந்தச் சூக்குமம். மிகச் சூக்குமமாகச்
செயல்படுதன் ரகசியம் அதில் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் தானாக நடைபெறும்
பல விசயங்கள் இருக்கும் போது ஏன் கோபம்? ஏன் உணர்ச்சிக் கொந்தளிப்பு? ஏன் சபதங்கள்?
ஏன் கொக்கரிப்புகள்?
*****
No comments:
Post a Comment