15 Aug 2017

குழந்தைகளைக் கையாள்வதற்கு முன்...

குழந்தைகளைக் கையாள்வதற்கு முன்...
            எஸ்.கே. ஒரு விதத்தில் முரட்டு ஆத்மா. சிறு குழந்தை ஒன்றை அடிக்கப் போய் விட்டான். அந்தக் குழந்தை இன்னொரு குழந்தையிடம் அடி வாங்கி வந்ததை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "ஏன் திருப்பி அடிக்கவில்லை?"  என்று அவன் அந்தக் குழந்தையிடம் கையை ஓங்கியவாறே ஆக்ரோஷமாகக் கேட்டான்.
            ஒரு குழந்தையிடம் அடி வாங்கிய பயத்தில் இருந்த குழந்தை, இப்படி ஒரு பெரிய மனிதன்(எஸ்.கே.!) ஆக்ரோஷமாகக் ‍கையை ஓங்கியபடிக் கேட்டால் என்ன செய்யும்? பேச்சு மூச்சு வராமல் நின்றது.
            இந்தக் குழந்தையை இவன் அடிக்கப் போய், அந்தக் குழந்தை இவனைத் திருப்பி அடித்தால்... எஸ்.கே. அதை பொறுத்துக் கொள்வானா? அந்தக் குழந்தை இவனைத் திருப்பி அடிக்காது என்ற தைரியத்தில்தான் அடிக்கப் போகிறான். ஆத்திரம் அவன் கண்ணை மறைக்கிறது.
            ஒவ்வொருவரும் தன்னுடைய விதிகளை மற்றவர்கள் மேல் திணிக்க முயலும் போதுதான் உறவுகளில் முரண்பாடுகள் எழுகின்றன. ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய விதிகளில்தான் இருப்பார்கள். அவர்களுக்கே உரிய மனநிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய மனநிலையை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
            அவர்களை அவர்களுடைய விதியை விட்டு வெளியே வரச் சொன்னால் எப்படி? எஸ்.கே. அவனுடைய விதியை விட்டு வெளியே வர ஒத்துக் கொள்வானா?
            அவன் அடி வாங்கி வந்த அந்த குழந்தைக்காக ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கலாம். தைரியமாக இருக்க வேண்டும் என்று எதையாவது உளறிக் கொட்டி இருக்கலாம்.
            ஒரு குழந்தையை அடிக்க கை ஓங்கியதற்காக தீராத வரலாற்றுக் களங்கத்திற்கு ஆட்பட்டு விட்ட அவன் இதை நினைத்து அவ்வபோது குலுங்கிக் குலுங்கி அழுகிறான். அடி வாங்கி வந்தக் குழந்தையை விட இவன் அதிகம் அடிபடுகிறான்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...