1 Aug 2017

விழாக்கள் குறித்த மீள்பார்வை

விழாக்கள் குறித்த மீள்பார்வை
            இந்த நாட்டில் விழாக்கள் தேவையற்ற ஒன்றாகும். அது ஒன்றைக் காரணமாக வைத்துக் கொண்டு குடியும், கும்மாளமாக நேரத்தையும், உழைப்பையும் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வியல் சார்ந்த நல்ல முயற்சிகளை எல்லாம் அது நிறுத்தி விடுகிறது.
            அதற்கான மெனக்கெடல்கள், சிரமங்கள் என்று அது ஒரு தனிக்கதையாக விரியும். அதன் பின்னணியில் இருக்கும் முறைகேடு, ஏமாற்று, ஒதுக்கல், சுருட்டல் என்று அது ஒரு நாவலாகவே விரியும்.
            நம் விழாக்கள் ஓர் அசிங்கம். பிடித்தவர்களைச் சம்பந்தம் இல்லாமல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, பிடிக்காதவர்களை தேவையே இல்லாமல் அசிங்கப்படுத்தி விழாக்கள் உறவுத் தளத்தில் ஓர் உலகப் போரையும், நட்புத் தளத்தில் ஒரு அருவருப்பையும், அக்கம் பக்கத்திலான தளத்தில் முகச் சுளிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.
            சாப்பாடு சமைப்பவர்களும், குறிப்பாக பிரியாணி போடுபவர்களும், டெகரேசன் செய்பவர்களும், கிப்ட் கடை வைத்திருப்பவர்களும், வாடகை சேர், பெஞ்ச், பாத்திரங்கள், சாமியானா வியாபாரிகளும் ஒரு அள்ளு அள்ளி விடுகிறார்கள். நகைக் கடை வைத்திருப்பவர்களுக்கு... நம் விழாக்கள்தான் ஜாக்பாட் காலம்.
            விழா முடிந்த மறுநாளே பரதேசிக் கோலத்தில் நிற்கும் அந்த வீட்டுக்காரர்களைப் பார்க்கையில் மூஞ்சிலே ஒரு அப்பு அப்பலாமா என்று தோன்றுகிறது. பிராது கொடுத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...