தமிழ் 'குடி' ஒரு காலப் பதிவு
கள்ளுக்கடை ஒழிந்து விட்டது. ஊருக்கு ஊர்
டாஸ்மாக். எதை விற்றால் மக்கள் வாங்குவார்களோ அதை வணிகர்கள் விற்பனை செய்யலாம். அரசாங்கமும்
அதையே செய்கிறது.
தமிழகத்தின் பிரதான இரண்டு கட்சிகளும்
பகுதியளவோ, முழுமையாகவோ மதுவிலக்கை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடுகின்றன. இரண்டு கட்சிகளும்
எப்படி மதுவிலக்கைக் கொண்டு வரும்? என்பது விடை காண முடியாத கேள்வி. இரண்டு கட்சியைச்
சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய மூலதன அளவில் மது ஆலைகள் இருக்கின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக கலந்து கொள்கிறார்கள். போராட்டக் களத்தில் நிகழ்ந்திருக்கும்
மிகப் பெரும் மாற்றம்.
ஆண்கள் குடித்து விட்டு சாலையில் கிடந்தால்
கண்டு கொள்ளாமல் போகும் போக்கு நிலவுகிறது. ஒரு பெண் குடித்து விட்டுக் கிடந்தால்
செய்தியாக்கும் சூழ்நிலை உள்ளது. குடியை ஆண்களுக்கு மட்டுமே என்பது போல வைத்துக் குடிக்கிறார்கள்.
பெண்கள் குடித்தால் குடும்பம் சீரழிந்து விடும் என்ற கருத்து இருக்கிறது. ஆண்கள் குடித்து
குடும்பம் சீரழிந்தாலும், சமூகம் குட்டிச் சுவரானாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கு
இருக்கிறது.
பெண்கள் குடிக்காமல் இருப்பது நல்லது.
குடும்பத்திற்காக மட்டும் அல்ல, டாஸ்மாக் வருமானம் ரெண்டு மடங்கு ஆகாமல் இருப்பதற்காகவாவது.
*****
No comments:
Post a Comment